ஜனநாயகத்தின் மிகப்பெரிய ஆயுதம் உங்கள் ‘சுட்டு விரல்’. ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், பல வாக்குறுதிகள் அள்ளப்படுகின்றன. ஆனால், காலங்காலமாக சாமானிய மக்களின் வாழ்க்கை முறை மாறாமல் அதே ஓலைக்குடிசையிலும், வறுமையிலும், அடிப்படை வசதிகள் இன்றியும் தான் தொடர்கிறது. மாளிகைகளுக்கும், சாமானியனின் குடிசைக்கும் இடையே உள்ள இந்த இடைவெளி ஏன் குறையவில்லை? நாம் வாக்களிக்கும் ஒவ்வொரு முறையும், நாட்டின் தலையெழுத்தை மாற்றுகிறோமா அல்லது நம் தலையெழுத்தை மாற்றிக் கொள்ளாமல் வாக்களித்துக் கொண்டிருக்கிறோமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடியும், சாமானிய மக்களின் குரலை அதிகார மையங்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டதே ‘சுட்டு விரல் மீடியா’ (Suttu Viral Media). ஜனங்களின் விரல், ஜனநாயகத்தின் குரல்!
Welcome to Suttuviral Media


